மீள் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெளிச்ச வீட்டினை கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்.
கடந்த 2024.05.04 அன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட்ஹவுஸ்) பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மட்டக்களப்பின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட்ஹவுஸ் ) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசப்படாமலும், அதே நேரம் வெளிச்சவீடு புனரமைக்கப்பட வேண்டிய கட்டாய தேவை இருப்பதை பிரதேச பொதுமக்களும், மீனவர் சமூகமும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர், பிரதேச பொதுமக்களின் கோரிக்கையினை செவிமடுத்த அமைச்சர் உடனடியாக வெளிச்ச வீட்டை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அதனடிப்படையில் துரித கெதியில் வெளிச்ச வீடு புனரமைக்கப்பட்டு மீள் புனரமைக்கப்பட்ட வெளிச்ச வீட்டினை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி.சிவலிங்கம் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment