பாலமீன்மடு வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு ஆளுநர் பணிப்புரை.............

 பாலமீன்மடு வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு ஆளுநர் பணிப்புரை.............

மட்டக்களப்பு, மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்திசெய்து வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்வேறு குறைபாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த பாலமீன்மடு வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் முயற்சி காரணமாக மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வேண்டுகோளுக்கமைய, பாலமீன்மடு வைத்தியசாலைகக்கு நேற்று இரவு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஆளுனர் அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டு, அங்குள்ள குறைபாடுகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Comments