மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் சிரமதானம்.............

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் சிரமதானம்.............

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, உலக இயற்கையை பாதுகாக்கும் தினத்தினை முன்னிட்டு சிரமதானப் பணியொன்றை முன்னெடுத்தது.

'இயற்கையை பாதுகாப்போம் – பொலித்தீன் அற்ற எமது நகரம்' எனும் கருப்பொருளில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த குணரட்ணவின் ஆலோசனைக்கைமைவாக சகல மாவட்டங்களிலும் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளரும், மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான எம்.சசிகுமார் ஒழுங்கைமைப்பில் இடம் பெற்ற சிரமதானத்தில், வாவியோரம் மற்றும் ஊறணி வாவிக்கரை பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் அகற்றப்பட்ட. மாவட்ட உதவிப் பணப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.சதீஸ்வரி மற்றும் இளைஞர் சேவை உத்தியோர்தர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments