மட்டு. இந்துக்கல்லூரி கிரிக்கெட் அபிவிருத்திக்கு ஒரு தொகை கிரிக்கெட் உபகரணங்கள் கையளிப்பு....
மட்டக்களப்பு, இந்துக்கல்லூரியின் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன், பாடசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒரு தொகை கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (24) அன்று பாடசாலை அதிபர் K.பகீரதன் ஊடாக மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் மு.சதீஸ்குமார், செயலாளர் இரா.சிவநாதன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு உபகரணங்களை மாணவர்களிடம் கையளித்தனர்.
Comments
Post a Comment