மட்டக்களப்பில் காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தினை விரைவுபடுத்த நடவடிக்கை............
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ், காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை நடைபெற்று வருகின்றது.
கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் இந் நடமாடும் சேவையானது இடம் பெறுகின்றது.
நேற்று இரவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடமாடும் சேவையினை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சேவைகள் வழங்கப்படுவதோடு, சேவையினை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கும் மாறும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
Comments
Post a Comment