மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற நபரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம்..............
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற நபரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நேற்று (06) காலை மாணிக்க கங்கையின் 02ஆம் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உயிர்காக்கும் படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாணிக்க கங்கையில் நீராடும் போது அவதானத்துடன் இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment