சிறப்பாக நடைபெற்ற திக்கோடை சூகணேச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி ................

 சிறப்பாக நடைபெற்ற திக்கோடை கணேச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி ................

 (கடோ கபு) பட்டிருப்பு திக்கோடை கணேச வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர், தடகள திறனாய்வு போட்டிகள் வித்தியாலய முதல்வர் ஆ. நித்தியானந்தம் தலைமையில் வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.



நாட்டில் அண்மைக்காலத்தில் நிலவிய அதிக வெப்பத்துடன் கூடிய கால நிலையால் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைவாக தடைப்பட்ட விளையாட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வே  இடம்பெற்றது.


கங்கை, காவேரி, யமுனை எனும் இந்துக்களின் புனித நதிகளின் நாமங்களை தாங்கிய  மூன்று இல்லங்களை சேர்ந்த மாணவர்கள் இவ் விளையாட்டு நிகழ்வில் தங்களது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். விளையாட்டுக்களின்  மொத்த புள்ளிகளின் அடிப்படையில் காவேரி இல்லம் முதலாவது இடத்தையும், கங்கை இல்லம் இரண்டாவது இடத்தினையும், யமுனை இல்லம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இவ் விளையாட்டு நிகழ்வுக்கு அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன் மற்றும் பட்டிருப்பு கல்வி வலயத்தின் முகாத்துத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் S. தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

விளையாட்டு நிகழ்வின் இறுதி அம்சமாக விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற இல்லங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது.










Comments