மட்டக்களப்பில் முன்பிள்ளை பருவ பராமரிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்றன...
முன்பிள்ளை அபிவிருத்திக்கான தேசிய செயலகம், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் முன்பிள்ளை பருவ பராமரிப்பு தேசிய வாரம் ஜூலை 14ம் திகதி தொடக்கம் ஜூலை 20ம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
'மலரும் பிள்ளைகளுக்கு வழி காட்டுவோம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, திராய்மடு கிராம சேவையாளர் பிரிவை முதன்மைப்படுத்தி, முன்பள்ளி மாணவர்களின் மாவட்ட நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.
ஐந்து முன்பள்ளிகள் இதில் பங்கெடுத்தன, உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் ஏற்பாட்டில் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரனின் ஒருங்கிணைப்பில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதோடு, கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவுக்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகள், முன் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment