மெதடிஸ்த மத்திய கல்லூரி சிங்கிதி சாரண மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டன..................
மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரி சிங்கிதி சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் சாரண தலைமையக உதவி சாரண ஆணையாளர் ரி.சசிகுமார், நிதிப்பிரிவுக்கான உதவி சாரண ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட பதில் சாரண ஆணையாளருமான அமிர்தன் கார்மேகம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
பாடசாலையின் குழு சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மனின் ஒழுங்கமைப்பிலும் சிங்கிதி சாரண தலைவர் எல்.ஜெயச்சந்திரனின் நெறிப்படுத்தலின் கீழும் சிறப்பான முறையில் நிகழ்வு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மெடிஸ்த மத்திய கல்லூரியில் சிங்கிதி சாரண மாணவர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்குசின்னங்கள், கழுத்துப்பட்டிகள், தொப்பிகள் அணிவிக்கப்பட்டதுடன் அதிதிகளினால் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
Comments
Post a Comment