வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான மீளாய்வு கூட்டம்............

 வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான மீளாய்வு கூட்டம்............

25 மில்லியன் முதலீட்டின் கீழ் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் தொடர்பாக ஆராயும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

அரசாங்க அதிபர் ஜெஸ்ரினா முரளிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இக்கூட்டத்தின் போது மேற்படி செயற்திட்டத்தினை ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட முறையின் கீழ் அமுல்படுத்துவதன் ஊடாக திட்டத்தின் நோக்கத்திற்கான உயரிய பலனை அடைவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டிருந்ததுடன், நிதிப் பங்கீடு, பொருத்தமான பயனாளிகள் தெரிவு உட்பட திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் ஊடாக பயறு, உளுந்து, கௌபி உள்ளிட்ட தானிய உற்பத்திகளை அடிப்படையாக கொண்ட  இத்திட்டமானது மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இக்கூட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் எந்திரி அருணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  ஜதீஸ்குமார், வாகரை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A.சுதர்ஷன்  உட்பட துறைசார் அதிகாரிகள் பயனாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







Comments