ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவ தீ மிதிப்பு நிகழ்வு ......

ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவ தீ மிதிப்பு நிகழ்வு ...... 

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சியம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு, ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்   கடந்த   சனிக்கிழமை 20.07.2024.திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிதுயது .

 26.07.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  தீ மிதிப்பு  நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இத்தீமிதிப்பின் போது ஆரையம்பதி  பிரதேச மக்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல நூற்றுக்கணக்கான தேவாதிகள் மற்றும் ஆண், பெண் அடியவர்கள் தீ மிதிப்பில்  கலந்து கொண்டனர்.

2024.07.27 இடம்பெறவுள்ள பள்ளையச் சடங்கு மற்றும் சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடன் ஆலய வருடாந்த உற்சவம்    நிறைவுபெறவுள்ளது.

ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதம பூசகர் சிரோன்மணி சக்தி ஸ்ரீ பூ.மகேந்திரராஜா தலைமையில் உதவி பூசகர்களான சக்திஸ்ரீ ம.முரளிதரன் மற்றும் சக்திஸ்ரீ பா.அருணன் ஆகியோரால் நிகழ்த்தப்படுகின்றது.






Comments