மாவடிவேம்பு பகுதியில், காணி உறுதிகளைபெற்றுக் கொள்வது தொடர்பான நடமாடும் சேவை.............
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற மக்களுக்கான உறுதிகளைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையொன்று இன்று (16) நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளில் நீண்டகாலமாக வசித்துவரும் குடும்பங்கள், பல ஆண்டுகளாக உறுதிகள் அற்ற நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டதுடன் இதில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனும் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment