மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுக் கழங்களுக்குஇ விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுக் கழங்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .............

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் கீழ் 2023 மற்றும் 2024 ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட 260 விளையாட்டு கழகங்களுக்கு, கூடைப்பந்து, வலைப்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட விளையாட்டுதுறை உத்தியோகத்தர் வி.ஈஸ்வரனின் ஒழுங்கமைப்பில் மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்ற உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார். இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர்  எந்திரி சிவலிங்கம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments