மட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்புருஷோத்மன் தேசிய ரீதியில் சாதனை...............
இன்று வெளியான இலங்கையின் முன்னணி சேவையான நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை (2021) முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த தங்கவடிவேல் புருஷோத்மன் அவர்கள் பரீட்சை முடிவுகளின் படி தேசிய ரீதியில் 16வது இடத்தினைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.
இவர் மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த தங்கவடிவேல் (ஓய்வுநிலை மக்கள் வங்கி உதவி முகாமையாளர்) மானவதி (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் கனிஷ்ட புதல்வன் ஆவார்.
இவர் இதற்கு முன்னரும் 2015 இல் இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டி பரீட்டையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்டைச்சைக்கு தெரிவாகி ஒரு சில புள்ளிகளால் வாய்ப்பினை தவற விட்டிருந்தார். எனினும் சுமார் 10 வருடங்களாக தனது இலக்கினை கைவிடாது இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்து பல சவால்களுக்கு மத்தியிலும் மீண்டும் சித்தி பெற்றுள்ளமை இவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
இவர் தனது பாடசாலை கல்வியை தரம் 1-5 வரை கல்லடி விவேகானந்தாவிலும், தரம் 6-13 வரை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலும் கற்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகி அதில் தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment