மட்டு, சமுர்த்தி வங்கிகளை முற்று முழுதாக்க கணனி மயமாக்கல் தொடர்பான கலந்துரையாடல்.......
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் 31 சமுர்த்தி வங்கிகளில் 11 சமுர்த்தி வங்கிகள் முற்று முழுதாக கணனி மயமாக்கப்பட்டு கைமுறையிலான (Manual) கணக்கீட்டு செயற்பாடுகளை கைவிடுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் (24)ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டிடத்தில் மாவட்ட செயலக சமுர்த்தி வங்கிப்பிரிவுக்கு பொறுப்பான கி.நிர்மலாதேவி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கலந்தரையாடலில் மாங்காடு, கல்லாறு, காத்தான்குடி, சந்திவெளி, புலிபாய்ந்தகல், மாவடிமுன்மாரி, கோப்பாவெளி, புளியந்தீவு, இருதயபுரம் கிழக்கு, பழுகாமம் மற்றும் மண்டூர் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களும், சமுர்த்தி பிரிவின் கண்கானிப்பு உத்தியோகத்தரும் மற்றும் சமுர்த்தி பிரிவின் கணக்காய்வு உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.
இதன் போது முற்று முழுதாக்க கணனி மயமாக்கல் செய்யப்பட்ட வங்கிளுக்கான கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களினால் உரிய வங்கி முகாமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.
Comments
Post a Comment