மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலத்தின் புதிய நுழைவாயில், திறந்து வைப்பு................

 மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலத்தின் புதிய நுழைவாயில், திறந்து வைப்பு................

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின், 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் நிறுவப்பட்டுள்ளது. புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் பெயர்ப் பலகை திரைநீக்கும் நிகழ்வு இன்றைய தினம், பாடசாலை அதிபர் அருமைத்துரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு, நுழைவாயிலையத் திறந்து வைத்ததோடு, பாடசாலையின் பெயர்ப் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தார். மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் இடப்பற்றாக்குறை தொடர்பில், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், பாடசாலைக்கான காணியும் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 79 வருடங்களுக்குப் பின்னர், பாடசாலையின் இடப்பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், விஸ்தரிக்கப்பட்ட பாடசாலை வளாகத்தில் பிரதான நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில், மதத் தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு வலய பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஹரணியா சுபாகரன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வலயக் கல்வி அதிகாரிகள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அதிதிகள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு, நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. பாடசாலையின் பாண்ட் வாத்திய அணியினரும், சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments