ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் விபத்துக்களைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு...........

ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் விபத்துக்களைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு...........

சுகாதார அமைச்சினால் ஜூலை முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை தேசிய விபத்து தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் விபத்துகளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில், விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் விபத்துகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விபத்துகள் அதனை தடுக்கும் முறைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு வீதிகள், பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஏற்படுகின்ற விபத்துகள் தொடர்பிலும், அதனை தடுக்கும் முறைமைகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது. கல்லூரி அதிபர் நிமாலினி பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி வைத்தியர் பிரசாந்தி லதாகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தொற்றா நோய் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இ.உதயகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தர முகாமைத்துவ சுகாதார பாதுகாப்பு வைத்திய அதிகாரி சகாய தர்ஷினி ஜூடி ஜெயக்குமார், பொது சுகாதார பரிசோதகர் யசோதரன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments