கூழாவடி புனித அந்தோனியார் ஆலய வின்சென்ட் டீ பவுல் சபையின் இரத்ததான நிகழ்வு................

 கூழாவடி புனித அந்தோனியார் ஆலய வின்சென்ட் டீ பவுல் சபையின் இரத்ததான நிகழ்வு................

மட்டக்களப்பு, கூழாவடி புனித அந்தோனியார் ஆலய வின்சென்ட் டீ பவுல் சபையினால் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (14) நடாத்தப்பட்டது.

கூழாவடி புனித வின்சென்ட் டீ பவுல் சபையின் 4வது ஆண்டு நிறைவு பூர்த்தியினை முன்னிட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவுடன் இணைந்து இரத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூழாவடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் றொபெட் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டு.போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்தியர் ரேஜெல் டீ சில்வா, பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைஸால், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், புனித வின்சென்ட் டீ பவுல் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

Comments