மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளருக்கு பாராட்டு................
ஜனாதிபதி சுற்றாடல் 2024 விருதை வென்ற மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தனது பாராட்டை தெரிவித்து கெளரவம் வழங்கினார்.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் (CEA) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருதின் வெள்ளி பதக்கத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் சுபிகரித்து.
இதனை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்திற்கு அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் தமது வாழ்த்தினை தெரிவித்தனர்.
இப் போட்டிகளுக்காக 902 பேர் விண்ணப்பித்திருத்த நிலையில் பலத்த போட்டியின் மத்தியில் தென் எருவில் பற்று பிரதேச செயலகம் வெற்றி பெற்றமை சிறப்பம்சமாகும்.
Comments
Post a Comment