மட்டக்களப்பு மாவட்டவேலையற்ற பட்டதாரிகளின்போராட்டம் தொடர்கிறது.......
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஏழாவது நாளாக, தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டம் வீட்டில் நாங்கள் றோட்டில், சிறப்பாக வாழ பட்டம் பெற்றோம் சீரழிகின்றது வாழ்க்கை போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் போது தொழில் உரிமையினைப்பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
Comments
Post a Comment