மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையை மீளமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்...............
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இறால் பண்ணையை மீளமைக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பண்ணைகளை இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு துரிதமாக வழங்கி, திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
இறால் பண்ணைக்கு என ஒதுக்கப்பட்ட காணியின் அளவு போதவில்லை என, திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், அது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
மாவட்ட காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி முகுந்தன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் உதவி பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், கொக்கட்டிச்சோலை பிரதேச இறால் வளர்ப்பு பண்ணையாளர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment