சமுர்த்தி லொத்தர் சீட்டிலுப்பு வீடுகள் புனரமைக்கப்பட்டு கையளிப்பு.............

 சமுர்த்தி லொத்தர் சீட்டிலுப்பு வீடுகள் புனரமைக்கப்பட்டு கையளிப்பு.............

சமுர்த்தி லொத்தர் சீட்டிலுப்பு வீடுகள் புனரமைக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது. 2023 ஜூலை, ஆகஸ்ட், நவம்பர் மாத சமுர்த்தி வீடமைப்பு லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற பயனாளிகளின் வீடுகள் புனரமைக்கப்பட்டு 2024.07.23ம் திகதி அன்று பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், கிராம சேவையாளர் ஜே.ஜெஸ்ரின், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களான சீ.எம்.எஸ்.இஸ்மாயில், ஏ.சி.சாதிக்கீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கபீர் CBO தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






 



Comments