பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் திறந்து வைப்பு............
மட்டக்களப்பு, பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில், ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், குறித்தொகுதுக்கப்பட்ட, நிதியில், நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தை திறந்து வைத்தனர்.
பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பொற்பதிகாரி டொக்டர் இனியன் தலைமையில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் கோஸ்தா, மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள செயலாளர் சிவலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் முரளீஸ்வரன், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment