வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் புதிய பஸ் இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்த்தன....................

 வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் புதிய பஸ் இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்த்தன....................

ஜனாதிபதியின் வழிகாட்டலில் போக்குவரத்து அமைச்சினால் பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் புணருத்தாபன திட்டத்தில் பழுதடைந்த பஸ்களுக்கு புதிய இயந்திரங்களை பொருத்தி பஸ்களை இயங்க வைக்கும் திட்டத்தில் நான்கு போக்குவரத்து சாலைகளுக்கு புதிய இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு  (13) சனிக்கிழமை வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் இடம் பெற்றது.

வாழைச்சேனை போக்குவரத்து சாலை, களுவான்சிக்குடி போக்குவரத்து சாலை, மட்டக்களப்பு போக்குவரத்து சாலை, மூதூர் போக்குவரத்து சாலை ஆகிய நான்கு சாலைகளுக்கு புதிய இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய பஸ் இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜங்க இமைச்சர் சிவனநேசத்துரை சந்திரகாந்தன் அமைச்சின் உயர் அதிகாரிகள் சாலை முகாமையாளர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சாலை நிருவாகத்தினரால் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளாள் தென்னங்கன்றுகளும் நடப்பட்டது.


Comments