மட்டக்களப்பில் நாடக கலைஞர்களுக்கு பயிற்சிப் பாசறை..............

மட்டக்களப்பில் நாடக கலைஞர்களுக்கு பயிற்சிப் பாசறை..............

மட்டக்களப்பில் நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப் பாசறையானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இருநாள் பாசறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கலசார அலுவல்கள் திணைக்களம், அரச நாடக ஆலோசனைக் குழு ஆகியவற்றின ஏற்பாட்டில்  உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் மட்டக்களப்பு  சர்வோதயாவில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

மட்டக்களப்பு  நாடக கலைஞர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் அரச நாடக விருது போட்டிகளுக்கான பங்குபற்றுதல்களை அதிகரிக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள  14 பிரதேச செயலக பிரிவுகளை  பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அனுபவமிக்க முன்னணி நாடக கலைஞர்களை மேம்படுத்துவதற்கு இவ் நாடக பயிற்சிப்பட்டறையானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது நாடக எழுத்தாக்கம், மேடை நடிப்பின் நுணுக்கங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்திக் கொள்ளவும், இலங்கை நாட்டின் பிரபல நாடக கலைஞர்கள் துறைசார் நிபுணர்களினால் இரு நாள் நாடக பயிற்சிப்பட்டறையை ஒழுங்கமைத்தமை குறிப்படத்தக்கது.

பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் எதிர்நோக்கும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் அரச நாடக ஆலோசனைக்குழு தலைவர் சந்ரசிறி போகமுவ, சிரேஷ்ட விரிவுரையாளர் பிரசன்னஜித் அபேசூர்ய, பிரபல நாடக கலைஞர் செனவிரட்ண ரொட்றிகோ, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கசுன் செனவிரத்ன, மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.எ.சி. ஜெய்னுலாப்தீன்,  தனுசியா யோகேந்திரன், எஸ். தனுசாந் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






Comments