கிரானில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.............

 கிரானில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.............

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாக  செவ்வாய்க்கிழமை (30) காலை வேன் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது: வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் கிரானிலிருந்து குடும்பிமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடனும் கமநலசேவை நிலையத்துக்கு முன்பாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பாதையில் நடந்து சென்ற நபர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் தரித்து நின்றவரும் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,  மோட்டார் சைக்கிளில் பயணித்த கிரானை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் மன்மதராசா (வயது 63) என்பவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Comments