கதிர்காம திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் விதைப்பந்துகள் கையளிப்பு ................

 கதிர்காம திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் விதைப்பந்துகள் கையளிப்பு ................

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகள் கதிர்காம திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் இந்நிகழ்வானது 02.07.2024 அன்று உகந்தையிலிருந்து ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் 130க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கேற்கின்றனர்.
இந்தப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் We For Us நிறுவனத்தினால் ஐந்தாயிரம் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. பக்தர்கள் பயணத்தின் நடுவே ஈரவலைய காடுகளில் இந்த விதைப்பந்துகளை வீசி தங்களது பாதயாத்திரையை தொடர்வர்.
குறித்த முன்னெடுப்பானது இளைஞர் யுவதிகளிடையே இயற்கையை பாதுகாக்கும் எண்ணக்கருவினை ஊக்குவித்து இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments