இலுப்படிச்சேனை, மாவடி ஓடை வீதி, மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு....................
மட்டக்களப்பு இலுப்படிச்சேனை, மாவடிஓடை பிரதான வீதி செப்பனிடப்பட்டு காபெட் இடப்பட்டு அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களினால் மக்களின் பாவனைக்காக நேற்றைய (13) தினம் திறந்து வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இவ்வீதி திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலமாக புனரமைப்பின்றி காணப்பட்ட இவ் வீதியானது, அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் காபெட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.
வீதி திறப்பு நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment