கருணாவின் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது...........

 கருணாவின் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது...........

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அக் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

வட-கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களின் அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், இணைப்பாளர்களுக்குமான கடிதங்களும் வழங்கப்பட்டன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே தமது ஆதரவு என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் இதன் போது கருத்துத் தெரிவித்தார்.



Comments