வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் உதவி திட்டம்....
'உறவுகளின் உறுதுணை' 'அறிவுசார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம் 'என்ற தொனிப்பொருளில் வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பால் 14/07/2024 அன்று ஈரளக்குளம் ஐயப்பன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
35 மாணவ மாணவியர்கள் கல்விகற்கும் இப்பாடசாலைக்கு தொடர்ந்தும் ஞாயிறு தோறும் உணவு வழங்குதல் உடன் அன்றைய தினம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதம செயற்ப்பாட்டாளர் க.இரகுநாதன், சவூதி ஒருங்கிணைப்பாளர் நா.இரவீந்திரன், பாடசாலை அதிபர், அறநெறிப் பாடசாலை ஆசிரியை, மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment