அமிர்தகளியில், முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் கண்காட்சி...........
மட்டக்களப்பு, அமிர்தகளி கருணை முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்பள்ளி சிறார்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் வகையில், இக் கண்காட்;சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதீபா தர்ஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிதிகளாக முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் அணுரேகா விவேகானந்தன், மண்முனை வடக்கு முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.மேகராஜ், மட்டிக்களி பொது சுகாதார மருத்துவமாது லக்சனா நிவேதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களின் வழிகாட்டலில், பெற்றோர்களின் பங்களிப்புடன் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
Comments
Post a Comment