'அன்னை லீலாவதி' நூல் வெளியீடும் ............

'அன்னை லீலாவதி' நூல் வெளியீடும் ............

 (28)   மட்டக்களப்பு  கல்லடி - உப்போடை துளசி மண்டபத்தில்  அமரர்  லீலாவதி அஞ்சலி நிகழ்வும், 'அன்னை லீலாவதி' நினைவுமலர் வெளியிட்டு நிகழ்வும் மற்றும்  தெரிவு செய்யப்பட்ட  பிரதேசவாழ்    150 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வும்  லீலாவதி அறக்கட்டளையினரின் அனுசரணையில் இடம் பெற்றது.

   மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், மடிக்கணணியும்  கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்லடி ஹரி சிறுவர் இல்லத் தலைவர் ச.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், கல்லடி- உப்போடை பேச்சியம்மன் ஆலயம் மற்றும் சித்தி விநாயகர் ஆலயங்களின்  முகாமையாளர் என்.ஹரிதாஸ், கே.ஓ.வி.ஞாபகார்த்த நம்பிக்கை நிதியச் செயலாளர் இரா.முருகதாஸ், மற்றும் கனடாவில் வாழும் கோ.தங்கவடிவேல், பா.விமலநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக திலகவதி ஹரிதாஸ்  மற்றும் சிலரும் கலந்து கொண்டனர் நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியை தர்ஷினி ஹரிகரனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.






Comments