மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில், உள்ளூர் கலைகளை வளர்ப்பதற்கான அரங்கு.............
பல்கலைக்கழகங்கள் சமூகங்களை நோக்கி செல்லவேண்டும் என்ற நோக்குடன் கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளூர் கலைகளுக்கான விழா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
'பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் காட்சிக்கூடமும்' என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடைபெற்றன. கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் துஸ்யந்தி சத்தியஜித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசர பீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கெனடி, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் புவனச்சந்திரா, உதவி வண்ணக்கர் சுவேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் தோரணங்கள் கொண்ட கலைக்கூடம் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது. பாரம்பரிய பறைமேள இசை, உடுக்கு இசை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
Comments
Post a Comment