கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு.......

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு.......

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால், புனானை கிழக்கு ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அல்ஹிராஸ் வித்தியலய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு இக்ரஹ் வித்தியாலயதில் இன்று 10.07.2024 சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களின் தலைமையில் ஆபியாஸ் நிறுவனத்தின் இணை அனுசரனையுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா,  பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ரிஸ்மின், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப்,  ஆபியாஸ் நிறுவன உரிமையாளர் ஏ.எம்.எம்.உவைஸ், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான்,  CBO அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ருகுனிதா, பிரிவு உத்தியோகத்தர் என்.எம்.எச்.முகம்மட், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்நிகழ்விற்கு இனை அனுசரணை வழங்கிவரும் ஆபியாஸ் உரிமையாளர் ஏ.எம்.எம்.உவைஸ் உதவி பிரதேச செயலாளரினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 









Comments