மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினம்.........

 மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினம்.........

சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தினரால், மட்டக்களப்பு நீதி மன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் உள்ள நீரூற்று பூங்காவில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் நினைவு கூறப்பட்டது. 

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபை தலைவர் கே.பாஸ்கரன், செயலாளர் எஸ்.ஜெயராஜா, பொருளாளர் D.யுவராஜன் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பி.முருகதாஸ் மற்றும் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, மகாஜனா கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, ஆனைப்பந்தி  இந்து மகளீர் கல்லூரி, வின்சென்ட் மகளீர் உயர்தர பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருக்கு பூமாலை அணிவித்து, பூமாலை அஞ்சலியும் செலுத்தப்பட்டது.






Comments