மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம், எதிர்வரும் 26ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்..............
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம், எதிர்வரும் 26ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்..............
வரலாற்றுப் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய, ஆடியமாவாசை மஹோற்சவம், எதிர்வரும் 26ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மஹோற்சவ கால நடவடிக்கைகள் தொடர்பில், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில், முன்னாயத்தக் கூட்டம் இன்று (16) நடைபெற்றது.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமார்கள், கிராம சேவை உத்தியோத்தர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், மக்கள் தொடர்பாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சார சபை உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து போன்ற பல விடயங்கள் தொடர்பில் துறை சார் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுதா சதாகரன், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி வைத்தியர் பிரசாந்தி லதாகரன், பிரதேச செயலக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.ராஜன், மக்கள் தொடர்பாடல் பிரிவு பொலீஸ் உத்தியோகத்தர் அன்புராஜ், சுகாதாரப் பரிசோதகர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். 26ம் திகதி ஆரம்பமாகும் மஹோற்சவம் ஓகஸ்ட் 4ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறும்.
Comments
Post a Comment