21 மில்லியன் ரூபா செலவில் மண்முனை மேற்கு பிரதேச புதிய பொதுச் சந்தை தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு.............

 21 மில்லியன் ரூபா செலவில் மண்முனை மேற்கு பிரதேச புதிய பொதுச் சந்தை தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு.............

அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடு க்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் 21 மில்லியன் ரூபா செலவில் மண்முனை  மேற்கு  பிரதேசத்தில்  அமைக்கப்பட உள்ள புதிய சந்தை தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  மண்முனை  மேற்கு  பிரதேச  பிரதேச சபை  செயலாளர் கிருஷ்ண பிள்ளை தலைமையில் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தார்.  மண்முனை  மேற்கு பிரதேச  செயலாளர் சத்யானந்தியினி நமசிவாயம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை  மேற்கு  பிரதேச  செயலகப்பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன், பிரதேச சபையின் ஊழியர்கள் பொதுமக்கள்  மற்றும் அரச உயர் அதிகாரிகள்  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தின் உற்பத்தி துறையை அதிகரிக்கின்ற ஒரு பிரதேசமாகும். எனவே இந்த புதிய சந்தை தொகுதி மூலம் இப்பகுதி விவசாயிகள் அதிக நன்மை அடைய உள்ளனர் என இங்கு கருத்து தெரிவித்தார்.







Comments