கிழக்கு மாகாண பறங்கியர் சமூகத்தின் கலைஇகலாசார விழா-2024
கிழக்கு மாகாண பறங்கியர் சங்கத்தின் ஏற்பாட்டில், பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் 2024ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய நிகழ்வுகள் (21) சிறப்பாக ஆரம்பமாகின.
வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் கலாசர விழாவின், இவ் வருட விழா, 21 முதல் செப்டம்பர் 15ம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு பறங்கியர் சங்கத்தின் தலைவர் டெர்ரி ஸ்டாக்ஸ் தலைமையில் மட்டக்களப்பு பறங்கியர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
விருந்தினர்களாக அருட்தந்தை ரோசைரோ, அருட்தந்தை நவரெட்னம் நவாஜி, கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டதுடன், பறங்கியர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment