காத்தான்குடியில் 20வது வருடாந்தபுலமைப் பரிசில் விழா................

 காத்தான்குடியில் 20வது வருடாந்தபுலமைப் பரிசில் விழா................

மட்டக்களப்பு, காத்தான்குடியில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 20வது வருடாந்த புலமைப் பரிசில் விழா இன்று (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரியுமான எஸ்.எல்.மன்சூர் தலைமையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான ஏ.எல்.மீராசாகிப்பின் நெறிப்படுத்தலில் நிகழ்வானது ஏற்பாட்டிருந்தது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்அமீர் அலி, கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் நிருவாகிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, புலமைத் தாரகை எனும் நூலும் இதன் போது வெளியீடப்பட்டது.

Comments