மட்டக்களப்பிலிருந்து 1771 மாணவர்கள் ஜனாதிபதி புலமைப் பரிசில் .........
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஆயிரத்து 1771 மாணவர்கள் புலமைப் பரிசிலினைப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கும், உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களில் 1471 மாணவர்களும், உயர்தரத்தில் கல்வி கற்கும் 300 மாணவர்களும் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரனின் ஒழுங்கமைப்பில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் தலைமையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நிகழ்வு நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சாகிர் மௌலானா மற்றும கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment