ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை (12) முதல் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது..............

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை (12) முதல் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது..............

க.பொ.த உயர்தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11ஆம் தரம் வரை கல்வி  கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று முதல்  (12)  மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் மாணவருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஜூன் 19ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், ஏனைய 24 மாவட்டங்களுக்கான புலமைப்பரிசில்  வழங்கும் நிகழ்வு இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

Comments