கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயத்தின் 108வது பெரு விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.......
மட்டக்களப்பு மறைமாவட்ட பாதுகாவலராம் புனித இஞ்ஞாசியார் பெயர் கொண்ட மட்டக்களப்பு, கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய 2024ம் ஆண்டுக்கான வருடாந்த பெருவிழா ஆயத்தமாக (26) அன்று மாலை 5.30 மணிக்கு கொடி பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அவர்களுடன் வட்டார பிரதிநிகள் கொடிகள்ஏற்றத்துடன் ஆரம்பமாகியது.
முதலாம் நவநாள் திருப்பலி அருளானந்தர் வட்டார இறை மக்களால் சிறப்பாக, அன்றைய திருப்பலியை இயேசு சபை துறவியான அருட்தந்தை சகாயநாதன் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. முதல் நாள் நவநாளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment