புனித இஞ்ஞாசியார் ஆலய 108வது வருடாந்த பெருவிழா யூலை - 26ல் ஆரம்பம்.....
மட்டக்களப்பு கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் 108வது வருடாந்த பெருவிழா யூலை -26ம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 04ம் திகதி இயேசு சபை துறவி அருட்பணி எமில் லூசியஸ் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு முடிவடையவுள்ளது.
26ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு செபமாலை தியானத்துடன், பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அவர்களின் தலைமையில் ஆலய மற்றும் வட்டடார கொடிகள் ஏற்றப்பட்டு, நவநாட்கள் ஆரம்பமாகவுள்ளது. முதலாம் நவநாளை அருளானந்தர் வட்டார இறைமக்கள் சிறப்பிக்கவுள்ளனர்.
நவநாள் காலங்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு செபமாலையும், பிராத்தனையும் நடைபெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
Comments
Post a Comment