ஆசிய யோகாசன போட்டியில் மட்டக்களப்பு சக்தி ஆனந்தா யோகா பாடசாலை மாணவர்கள் 09 பதக்கங்களை சுவிகரித்துள்ளனர்.....................

ஆசிய யோகாசன போட்டியில் மட்டக்களப்பு சக்தி ஆனந்தா யோகா பாடசாலை மாணவர்கள் 09 பதக்கங்களை சுவிகரித்துள்ளனர்.....................

2024ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் திகதி நடைபெற்ற ஆசிய யோகாசன போட்டியில் மட்டக்களப்பு சக்தி ஆனந்தா யோகா பாடசாலை மாணவர்கள் ஆறு (06) தங்க பதக்கங்களையும், இரண்டு  (02) வெள்ளி பக்கத்தையும், ஒரு (01) வெண்கல பதக்கத்தையும் வென்று மட்டு நகருக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

இப் போட்டியானது சிவவிஷ்னு யோகா பீடம் இலங்கை, இந்திய தேசிய யோகாசன சம்மேளனம், சர்வதேச யோகாசன பேரவை ஆகிய அமைப்புகளினால் ஒழுங்கு செய்யப்பட்டு 30.06.2024 அன்று கொழும்பு ஷீ ராம் கல்யாண மண்டபம், புதிய செட்டித் தெரு, கொழும்பில் நடைபெற்றது.

தங்க பதக்கம் வென்றவர்கள்:

S.ஜெயஸ்ரீ  - 5 வயது

S.விகாஷிகா  - 10 வயது

P.நிஷா ஹரி  - 11 வயது

A.ஓவியா  - 12 வயது

P .கேஷி  - 14 வயது

N.ஷப்தமி  - 17 வயது

வெள்ளி பதக்கம் வென்றவர்கள்:

M.கிரன்  - 5 வயது

S.அபிராம்  - 27 வயது

வெண்கல பதக்கம் வென்றவர்கள்:

P.சர்வன் - 8 வயது

இந்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேற்படி மாணவர்களை சிறப்பான முறையில் பயிற்றுவித்த மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா பாடசாலை ஸ்தாபகர் சிவசக்தி சிவபாதசுந்தரம் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.






Comments