கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-03 திருச்சபை பாடசாலை அரசு வசமாகியது:

 கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-03

திருச்சபை பாடசாலை அரசு வசமாகியது:

அரசாங்கம் விடுத்த அறிவித்தலானது சகல பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதான அறிவித்தல் வெளியானது, அது வரை காலமும் திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு வந்த பாடசாலை அரச கட்டுப்பாட்டின் கீழ் போனது. இதில் குறிப்பாக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியை ஆரம்பித்தில் இருந்து தங்கள் அயராத முயற்சியால் முன்னேற்றி இருந்தார்கள் இயேசு சபை துறவிகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், அரசாங்கம் இலங்கையில் இருந்த சகல பாடசாலைகளையும் 1960ல் தம்வசப்படுத்தி கொண்டது. இதன் பின் காலம் ஒருண்டோடிக் கொண்டிருந்தது அப்போது புளியடிக்குடா பங்குத்தந்தையாக அருட்தந்தை அலோசியஸ் செலர் வருகின்றார் இவர்  புனித இஞ்ஞாசியார் ஆலயத்தையும் பராமரித்து வருகின்றார். 

சுறாவளியும் பாதர் மேயரும்:

1968ல் செபஸ்தியார் ஆலயத்தை கட்டுவதற்காக அப்போது வாகரையில் ஓர் ஆலயத்தை கட்டியிருந்த F.X.மேயர் அடிகளார் செபஸ்தியார் பங்கிற்கு வருகின்றார் அப்போது அவர் மீன் வடிவிலான ஓர் கட்டிடத்தை கட்டி மேலே ஆலயமும், கீழே மண்டபத்தையும் கட்டுகின்றார் இதன் போது இஞ்ஞாசியயர் ஆலயத்தையும் கவணித்து வருகின்றார்.

அப்போது தான் மட்டக்களப்பை உலுக்கிப்போடும் மிகப்பெரிய காற்றின் வேகம் கூறாவளியாக மாறி மட்டக்களப்பு மாவட்டத்தையே மிகவும் சேதமாக்கியது. இதன் போது இஞ்ஞாசியார் ஆலயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் பாடசாலை கட்டிடமும் பாதிக்கப்பட்டிருந்தது.

1978ம் ஆண்டு சுறாவளி மட்டக்களப்பின் பல சேதங்களை ஏற்படுத்தி இருந்தது, குறிப்பாக 1968ல் கட்டத்தொடங்கிய செபஸ்தியார் ஆலயம் 08 அண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு 1977ம் ஆண்டு திறக்கப்பட்டிருந்தது, அதன் கூரைகள் பாரிய சேதத்தை ஏற்படுத்தி  இருந்தன அத்துடன் கல்லடிப்பாலம், கோட்டைமுனை கணிஸ்ட வித்தியாலயம், சாந்தி தியேட்டர், கோட்டைமுனை பள்ளிவாயல், தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம், புகையிரத நிலையம், பஜார் வீதி போன்றவற்றை குறிப்பிடலாம். 

அருட்தந்தை மேயர் அடிகளாரின் சேவை அக்கால கட்டத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. எது வித பாகுபாடும் பாராமல் சகல மக்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுத்தார் மற்றும் வீட்டுக்குத்தேவையான பொருட்கள், ஆடைகள், சிறு பிள்ளைகளுக்கான பால்மா மற்றும் கர்ப்பிணித்தாய்மாருக்கான உதவியை வழங்கி தன் தன்னலமற்ற சேவையை செய்தார்.

டச்பார் கடற்கரையில் அந்தோணியார் ஆலயம்:

இதன் போது பாதர் மேயர் அவர்களின்  கண்கானிப்பின் கீழ் இருந்த ஆலயங்களுக்கும் பல தேவைகள் கிடைத்தன, அதன் அடிப்படையில் புனித இஞ்ஞாசியார் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது,  78ம் ஆண்டு சூறாவளி நினைவாக புதிதாக ஒரு அந்தோணியார் சிற்றாலையம் கடற்கரையில் அமைத்துக் கொடுத்தார். அவ்வாலயம் இன்றும் புதுப்பொழிவுடன், வருடாந்த திருவிழாவுடன், அந்நினைவுகளை நினைவூட்டி வருகின்றது. இது மாத்திரமின்றி பாதர் மேயர் இளைஞர்களுக்காக மற்றுமொரு மிகப்பிரமான்டமான ஒரு பணியை செய்தார் அது தான் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம்  ஒன்றை அமைத்துக் கொடுத்தார் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை டச்பார் மக்களிடையே  உண்டு பண்ணி இருந்தது. 

காலம் நகரத் தொடங்க பாதர் மேயர் அவர்கள் மன்றேசா தியான இல்லத்திற்கு செல்ல செபஸ்தியார் ஆலயத்திற்கு பங்குத்தந்தையாக வருகின்றார்  ஒருவர் மறக்க முடியாத ஓர் நிகழ்வை செய்யப்போகின்றார் அவர் யார் அடுத்த தொடவில் பார்ப்போம்....

நான்காம் தொடர் தொடரும்......











Comments