கவிஞர் தங்க யுவனின் கதிர்காம கந்தன் பாதயாத்திரை பாடல்கள் நூல் வெளியீட்டு விழா...............
கதிரவன் கலைக் கழக வெளியீடான கவிஞர் தங்க யுவனின் கதிர்காம கந்தன் பாதயாத்திரை பாடல்கள் நூல் வெளியீட்டு விழா இன்று 30.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு அருள்மிகு விக்னேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
கதிரவன் கலைக்கழக செயலாளர் புதுவையூர் பு.தியாகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையினர், கதிர்காமக் கந்தன் பாதயாத்திரை பக்தர்கள், கதிரவன் கலைக்கழக அங்கத்தவர்கள். மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment