காத்தான்குடி பிரதான வீதியில் வாகன விபத்து:இருவர் காயம், வாகனம் சேதம்.........
(எம்.எஸ்.எம்.நூர்தீன்) காத்தான்குடி, பிரதான வீதியில் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், வாகனமும் சேதமடைந்துள்ளது.
கல்முனையைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொலனறுவையிலிருந்து கல்முனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வேன் காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் பெரிய பூச்சாடி ஒன்றில் மோதுண்டு இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் வேனின் சாரதியும் அதில் பயணித்த சிறு பிள்ளை ஒருவரும் சிறிய காயத்துக்குள்ளாகியுள்ளனர்.
வேனின் முன்பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், பூச்சட்டியும் உடைந்து சேதமேற்பட்டுள்ளது
காயமடைந்தவர்கள் காத்தானகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீஸ் நிலைய போக்குவரத்து பொலீசார் மேற்கொண்டுள்ளனர்
Comments
Post a Comment