மட்டக்களப்பு மாவட்டப் பிரதேச செயலகங்கிடையிலான விளையாட்டு விழா................
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவும், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கிடையில் நடாத்திய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டீனா முரளீதரன் பிரதம அதிதியாகவும், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் யூ.சிவராசா மற்றும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மட்டக்களப்பு மாவட்ட சகல பிரதேச செயலாளர்களும் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகம் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இவர்களுக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் உத்தியோகத்தர்களுக்கான தொப்பி மாற்றும் நிகழ்வு, கயிறிழுத்தல் போட்டி என்பனவும் இடம் பெற்றன .
.
Comments
Post a Comment