காத்தான்குடியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை..........
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உறுமய காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனை நடமாடும் சேவை இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதரின் வழிகாட்டலின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா தலைமையில் நடமாடும் சேவை இடம் பெற்றது. இதன் போது காத்தான்குடி பிரதேச செயலக காணிப்பிரிவு அதிகாரிகளினால் பொது மக்களுக்கு காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment