பாசிக்குடா கடலில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்பு..............
பாசிக்குடா கடலில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் செவ்வாய்க்கிழமை (18) பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கிய இளைஞனை பாசிக்குடா கடற்படையினர், பொலிஸார் ஆபத்தான நிலையில் மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய இளைஞன் கூடுதலாக நீர் அருந்தியதில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment